Citrus
Lemon is a plant. The fruit, juice, and peel are used to make medicine. Lemon is used to treat scurvy, a condition caused by not having enough vitamin C. Lemon is also used for the common cold and flu, H1N1 (swine) flu, ringing in the ears (tinnitus), Meniere’s disease, and kidney stones.
எலுமிச்சை (Lemon) சிட்ரசு எலுமிச்சை (எல்) ஓசுபேக் என்ற தாவரவியற் பெயர் கொண்ட நிலம் வாழ் தாவரமாகும். ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம் என்ற துணைப்பிரிவில் ருட்டேசி குடும்பத்தின் உறுப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ளது.பெரும்பாலும் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல மண்டலப் பகுதிகளில் இது வளர்கின்றது. குறுஞ்செடி வகைத் தாவரமாக எலுமிச்சை அறியப்படுகிறது.
சிகர்வி, வாதம், முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் உணவாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். ஊறுகாய், மருந்துகள், மிட்டாய், பழப்பாகு முதலியன தயாரிக்கப் பயன்படுகின்றன. நறுமண எண்ணெய்கள் தயாரிப்பிலும் சோப்பு தயாரிப்பிலும் எலுமிச்சை பயன்படுகிறது.எலுமிச்சை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது எலுமிச்சையில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பிறவும் சிறிதளவில் கலந்துள்ளன. எலுமிச்சைகள் பாலிபீனால்கள், டெர்பீன்கள் மற்றும் டானின்கள் [16] உள்ளிட்ட பல்வேறு தாவர வேதிப்பொருட்களும் எலுமிச்சையில் உள்ளன. மற்ற சிட்ரசு பழங்களைப் போலவே இதிலும் சிட்ரிக் அமிலத்தின் குறிப்பிடத்தக்க செறிவு நிரம்பியுள்ளது