Pongamia pennatta
Pongamia pinnata (L.) Pierre is one of the many plants with diverse medicinal properties where all its parts have been used as traditional medicine in the treatment and prevention of several kinds of ailments in many countries such as for treatment of piles, skin diseases, and wounds.
புங்கை அல்லது புங்கு அல்லது பூந்தி அல்லது கிரஞ்ச மரம் (Millettia pinnata) என்னும் இத்தாவரம் பட்டாணி சார்ந்துள்ள பேபேசியேக் குடும்பத்தைச் சார்ந்தது. இது வெப்பமண்டலப் பகுதிகளான ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. இது இந்தியா மட்டும் அல்லாது சீனா, சப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளிலும் காணப்படுகிறது
புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை. தீப் புண்களை ஆற்றும் சக்தி புங்கை மரத்தின் பட்டைக்கு உள்ளது. புங்கை மரத்தின் பட்டை, ஆலம்பட்டை, பழுத்த அத்தி இலை -இவை மூன்றையும் நன்கு அரைத்து புங்கன் எண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்ட புண்களின் மீது தடவி வர புண்கள் வெகுவாக ஆறும்.