Seethapal ( Annona squamosa)
சீதளப்பழம் அல்லது சீதாப்பழம் (Sugar apple,தாவர வகைப்பாடு : Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும். இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும். பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Environmental Impact: The Sita Ashoka tree is an important source of food and habitat for many birds, animals, and insects. The flowers of the tree are particularly attractive to bees and butterflies, which help to pollinate other plants in the surrounding area.
சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது. காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம். சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.